அன்பு எனும் ஒற்றைப்புள்ளி...
மனதில் பூத்த பூ உதிராதே உதிருமே மண்ணில் மலர்ந்தவை அகத்தில் உள்ள நினைவுகள் அவை காணாதே பிரிவுகள் காரணமின்றி புன்னகை பூத்தாலும் காரியமின்றி கண்ணீர் ஊற்று பெருகாதே! மௌனம் சுமக்கும் வார்த்தைகளையும் கோபம் காவும் அன்பையும் உணருமே உன்னத அன்பு இல்லையென ஏங்காதே அன்பு ஒன்றே போதும் தர்மந்தனை ஸ்தாபிக்க அன்பு கொண்ட இதயம் காணும் அமைதி - அகிலத்தையே வீழ்த்தும் பேராயுதம் நீ தேடி போகும் முன்னே உனை தேடி வந்தாலே - அது இறுதிவரை உடன் வந்தாலும் அற்று போகும் தருணமதில் அதீத அக்கறை நீ கொள்வாயே - அது மாறா உண்மை!