Posts

Showing posts with the label தமிழ்

மீண்டும் தொலைவேனா?!

Image
எனை தேடும் பணி தொடங்கவே  உனை அடைந்தது என் கண்கள்  ஒளியிழந்த இரவுகளின் கனவானாய்  விடியல் காண விட்டுப்போனால்  தொலைந்து போவேனோ மீண்டும்? எண்ணங்களுக்கு தடைபோட்டாலும்  கண்களுக்கு தாழ் போடமுடியுமா? மூச்சுமுட்டும் நெருக்கம் சொப்பனம்  ஆயினும் - பார்வைபடும் தூரம்  இங்கு சொர்க்கம் காட்டிலும் புனிதமே! மனதை கொள்ளை கொண்ட அந்த  மௌனம் - அதை கலைத்து அன்பு ராகம் பாட பேராசை கொண்டாலும்  வார்த்தைகள் வற்றிப்போக - இந்த  ஊமை உன்வசமானதேனோ?    உன்னில் நானும் - என்னில்  நீயும் தொலைந்துவிட   மெல்ல மெல்ல மனமும்  ஏங்குதே உன் சிறு பார்வைக்கு!  

எப்போது?

Image
தொலைதூரம் இன்றி  துயர் தருவதே உன் மௌனம் உன்னால் தவிர்க்கப்பட்டு  மனம் பதைத்து  உயிர் தவிக்கிறது  பேச்சொலி கேட்கவே   மனம் அடம்பிடிக்க  காலத்தின் கோலமிது  ஒருநாள் கைகூடுமென  வலி சுமக்கிறேன்  கனவில்லா இரவுகளும்  உண்டு - உன் நினைவில்லா  நொடியும் உண்டோ??? - வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை இருப்பினும் வேண்டாமல் போனதேனோ???  விரல் தொடுகையில்  நாணம் நடுநிலை காண  கை கோர்த்து  இதழ் அணைத்து கதை பேச காத்திருக்கையில் காதலும் பெருகுதே!  

இடைவெளி

Image
உன்விழி பார்க்கையிலே  என் இதயம் வழிமாறிப்போவதும்  என் சொல் கேட்க மறுப்பதும்  நான் விரும்பி ஏற்றுக்கொண்ட அவஸ்த்தை சொல்லாத வார்த்தைகள்  நில்லாத ஆறு போல ஊற்றுவதும்  கட்டிக்கொண்டு நெஞ்சோடு  சாயும் போது வற்றிப்போகும் வார்த்தை  அல்லும் பகலும் வந் து போக   எனக்கென ஒரு நிமிடம்   காட்டாத உந்தன் கடிகாரம்  காட்டியதே எனக்கென ஒரு இடம்  தாமரை இலை மேல் விழும்  நீர்த்துளி போல உன்னில் நான்  ஒட்டாமல் ஓடிவிடுவேனோ - இந்த  மனக்கிலி தருதே ஆறாவலி   உன் நினைவுகளின் மத்தியில் நான் வரமா சாபமா என அறியமுன்பே  அதில் முழுவதுமாய் நனைந்தேன் ஒதுங்கிவிட வழியிருந்தும்  மனம் மறுத்தது - முழுதும்   நனைந்தும் முக்காடு கொண்டு  நான் போகும் பயணம்  எதை நோக்கி? நீ நான்  எனும் இந்த இடைவெளி  என்று தணிந்து ஆகுவோம்  நாம்..?!

அவன் அருகே...

Image
கண்ணாடி என் முகம் காட்டும்  வேளையிலும் - மனக்கண்ணாடி  காட்டும் உன் முகம்  கண்டு நெகிழ்கின்றேன் - மூழ்கின்றேன்  என் மனக்கடலில்  நீ குதித்தவுடன்.  உலகம் மறந்து உன்னுள்  உறைய தவிக்கின்றேன் - ஊஞ்சலாடுகின்றேன் உன் நினைவென்னும்  தென்றலில்.  புயலென உன் பார்வை  என்னை தாக்கவே  உன் விழி காண - வழி  தேடுகின்றேன்.  மரணம் காட்டிலும்  கொடிய உன் கோபம்  தரும் வழியில்  துடிக்கின்றேன்.  சில தருணங்களில் இளகாத  உன் மனத்தால் மெழுகாய்  உருகிப்போகின்றேன்  ஆனாலும் அந்த இருளும் அவன் அருகே பௌர்ணமியே...

அன்பு எனும் ஒற்றைப்புள்ளி...

Image
மனதில் பூத்த பூ உதிராதே உதிருமே மண்ணில் மலர்ந்தவை அகத்தில் உள்ள நினைவுகள்  அவை காணாதே பிரிவுகள்  காரணமின்றி புன்னகை பூத்தாலும்  காரியமின்றி கண்ணீர் ஊற்று  பெருகாதே! மௌனம் சுமக்கும் வார்த்தைகளையும்  கோபம் காவும் அன்பையும் உணருமே உன்னத அன்பு  இல்லையென ஏங்காதே  அன்பு ஒன்றே போதும்  தர்மந்தனை ஸ்தாபிக்க  அன்பு கொண்ட இதயம் காணும்  அமைதி - அகிலத்தையே  வீழ்த்தும் பேராயுதம்   நீ தேடி போகும் முன்னே  உனை தேடி வந்தாலே - அது  இறுதிவரை உடன் வந்தாலும்  அற்று போகும் தருணமதில் அதீத  அக்கறை நீ கொள்வாயே - அது மாறா உண்மை!

கேளாய் பூங்குழலே

Image
எந்தவொரு குறையுமின்றி அவனிடத்தில்  கொட்டிக்கிடப்பற்றில்  அவளுக்கு மிகவும் பிடித்தது - அந்த கோபம் சில தருணமதில்  அவனுள் கொந்தளிக்கும் தீக்கு  இரை அவளோ என்ற உணர்வு இருந்தாலும்  இரையாவதில் அவளுக்கு ஒரு இன்பம். முறைக்கும் அவன் விழிகள்  திசையெங்கும் அதிரும் கம்பீர குரல்  இவை கண்டு பயந்தாலும்  அகம் நிறைந்த அன்போடு  அவன் சினங்கொண்ட பொழுதெல்லாம்  அவன் அறியா வண்ணம் ரசிப்பாள். சில நேரங்களில் அவனுள் எழும் குழப்பங்கள் அவளை காயப்படுத்தியதுண்டு அவனது எண்ணக்கிறுக்கல்கள்  அவளுக்கு என்றும் சுகமான கீறல்களே. அவனின் அனைத்தையும் மதித்து  பிடித்தும் போன அவளுக்கு கோபம்  ஒரு குறையே இல்லை - எதிர்த்து  பேசும் எண்ணம் அவளுக்கில்லை  வாய்ப்பிருந்தும் அவனுக்கு  அடங்கி போவதில் ஒரு பேரானந்தம். அவனுக்கும் தெரியும்  இவள் தானே என்று - அதனாலோ  என்னவோ அவன் விழிகள்  கவி பொழியாது - வார்த்தையில்  காதல் தவழாத இறுகிய முகம்  அது மலர்கையில் கண் இமைக்கா  காண்பது அவளுக்கு ஓர் வரம். இதழ் முத்தம் உறவொன்றை  சீர்செய்யும் பா...

மறுபிறவி வேண்டுமா?!

Image
மாற்றங்கள் கண்ட  விழியிரண்டும்  விண்மீன் அடியில்  மெல்ல அசருகையில்  கோபம் வெறுப்பை தாங்கிய போதும்  மனம் மறுத்த சுவீகரிப்போ - நிராகரிப்பு!  கடந்து போன போதிலும்  காலம் காயமாற்ற தவறுகையில்  எனக்குள் நான் கண்ட உண்மை... எந்தவொரு நிராகரிப்பும்  ஏதோவொன்றை புதுப்பிக்கின்றது இரவு கொன்று காலை கதிரவன்  காண்கையில் புரிந்து கொண்டேன்...     வலி தந்த நிராகரிப்பும்  ஒரு நிகரில்லா சுதந்திரமே! 

வீரம் விளையாதோ!

Image
கடுஞ்சொல் கேட்டு தலை தாழ்த்தாமல் நிமிராயோ! முடியா தருணமதில் ஓட்டம் தவறில்லை - துரத்துவது நீயானால்.   அடங்க போவது இல்லை - காரணம் அடங்கி போனதே இல்லை அன்பு கொண்டு அகிலம் அணைத்தது போதும் என்று தவிக்கையில்  கட்டிப்போட்ட கரங்களோ தன் கட்டவிழ்த்தெறிகையில் கத்தியை அணைக்கும்.   ஆர்ப்பரிக்கும் ஆழ் கடல் நான் என்னுள் கலந்திட வரும் ஆற்றுநீர் நீயென எண்ணி - நிகரிலான் உனை புன்னகை கொண்டு அனுமதிப்பேன்.   நீ விதைத்ததே உன் நிலத்தில் விளையும் - ஆனால் நெல் விளையும் என் மண்ணில் சேர்ந்தே விளைந்ததாம் வீரம் - அது கொண்டு உயருவோம் ஓரிரு படி!

எது அழகு?

Image
இரு கரம் பற்றி சிறு இடை தொட்டு கண்ணோவியம் தீட்டி கவி பொழியோனே! அன்பு கொண்டு அணைக்க புன்னகைத்தப்படி ஓடும் மழலை , கோபம் களைக்கும் குற்றமற்ற அன்பு , தனித்து விடப்பட்ட பலம் , தன்னலம் அறியா பலவீனம் , நினைக்க தோன்றும் நினைவுகள் , ஏதோ தயக்கம் தந்த மௌனங்கள் , அருகில் இருந்த போது தொலைக்கப்பட்ட தற்போதைய தேடல்கள் ,   கடந்து போக மீதம் இருப்பவைகள் , வரையறையில்லா வேதனை , புறந்தனை புறக்கணித்து அகமதை அனுசரித்த இடுக்கண் நகைப்பு , வலையில் மாட்டிய மீன் போல , உன் பொய்யின் பிடியில் சிக்கித்தவிக்கும் நான் என யாவும் அழகே!

விதை விருட்ச்சமாவது விந்தையல்லவே!

Image
நதியின் நெளிவு சுளிவிலும் நயம்படா புயலின் வேகம் போதவில்லையாம் வெறுமையின் சலிப்பும் வெறுப்பு கொண்ட   அருவருப்பும் வாழ விடாத வன்மமும் விடாது துரத்த மீளா துயர் தந்த தனிமையில் கடிகார முள் மீதான என் கருணையற்ற பார்வை தோற்ற இரவுகள் என புதையுண்டு போனேனே இருப்பினும் பூமி பிளந்து கிளை துளிர்த்து சாதிப்பேன் அதுவே புரட்சி! வீழ்வதே எழுச்சிக்காகவே... வீழாமல் எழுவது சாத்தியமா ? அனுதினம் உதிக்கும் ஆதவன் கூறும் வாசகமும் அதுவே..!

விடியலை நோக்கி!

Image
நேற்று போல் இன்றில்லை என்பதால் இன்று போல் நாளை இருக்காது மாற்றமே ஆதாரமாகி போனது காலமே காயமாற்றி போகிறாயா ? காணாத காட்சிகளும் கல்லாத நெறிகளும் கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளும் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது நினைவுகள் அலைமோத மஞ்சத்தின் மடியில் முகம் புதைத்து   விழிநீர் வழித்தேன் கடந்து வந்தேன் என்று கொண்டாடவா ? இல்லை , வருவதை எண்ணி தவிக்கவா ? பசுமரத்தாணி போல் பதிந்தவையும் உண்டு சூரிய ஒளி கண்ட பனி போலும் சில உண்டு ஆயிரம் பிறை காணும் ஆசையில்லை அஸ்தமனம் காணுவதே போதும் என்றாயிற்று உள்ளொளி கூறும் உண்மை அதுவே சத்தியம் மாற்றம் உலகம் கண்ட மாறா நியதி அது கண்டு மனம் விட்டு போகாதோ ? அமைதிகொள் மனமே சற்றுநேரத்தில் புறப்படுவோம் ஒரு விடியலை நோக்கி...