எது அழகு?
இரு கரம் பற்றி சிறு இடை தொட்டு கண்ணோவியம் தீட்டி கவி பொழியோனே! அன்பு கொண்டு அணைக்க புன்னகைத்தப்படி ஓடும் மழலை , கோபம் களைக்கும் குற்றமற்ற அன்பு , தனித்து விடப்பட்ட பலம் , தன்னலம் அறியா பலவீனம் , நினைக்க தோன்றும் நினைவுகள் , ஏதோ தயக்கம் தந்த மௌனங்கள் , அருகில் இருந்த போது தொலைக்கப்பட்ட தற்போதைய தேடல்கள் , கடந்து போக மீதம் இருப்பவைகள் , வரையறையில்லா வேதனை , புறந்தனை புறக்கணித்து அகமதை அனுசரித்த இடுக்கண் நகைப்பு , வலையில் மாட்டிய மீன் போல , உன் பொய்யின் பிடியில் சிக்கித்தவிக்கும் நான் என யாவும் அழகே!