எது அழகு?

இரு கரம் பற்றி

சிறு இடை தொட்டு

கண்ணோவியம் தீட்டி

கவி பொழியோனே!

அன்பு கொண்டு அணைக்க

புன்னகைத்தப்படி ஓடும்

மழலை,

கோபம் களைக்கும்

குற்றமற்ற அன்பு,

தனித்து விடப்பட்ட பலம்,

தன்னலம் அறியா பலவீனம்,

நினைக்க தோன்றும் நினைவுகள்,

ஏதோ தயக்கம் தந்த மௌனங்கள்,

அருகில் இருந்த போது

தொலைக்கப்பட்ட

தற்போதைய தேடல்கள்,  

கடந்து போக மீதம் இருப்பவைகள்,

வரையறையில்லா வேதனை,

புறந்தனை புறக்கணித்து

அகமதை அனுசரித்த

இடுக்கண் நகைப்பு,

வலையில் மாட்டிய மீன் போல,

உன் பொய்யின் பிடியில்

சிக்கித்தவிக்கும்

நான் என யாவும் அழகே!



Comments

Popular posts from this blog

அவன் அருகே...

எப்போது?

வீரம் விளையாதோ!