மறுபிறவி வேண்டுமா?!
மாற்றங்கள் கண்ட விழியிரண்டும் விண்மீன் அடியில் மெல்ல அசருகையில் கோபம் வெறுப்பை தாங்கிய போதும் மனம் மறுத்த சுவீகரிப்போ - நிராகரிப்பு! கடந்து போன போதிலும் காலம் காயமாற்ற தவறுகையில் எனக்குள் நான் கண்ட உண்மை... எந்தவொரு நிராகரிப்பும் ஏதோவொன்றை புதுப்பிக்கின்றது இரவு கொன்று காலை கதிரவன் காண்கையில் புரிந்து கொண்டேன்... வலி தந்த நிராகரிப்பும் ஒரு நிகரில்லா சுதந்திரமே!