மறுபிறவி வேண்டுமா?!

மாற்றங்கள் கண்ட 

விழியிரண்டும் 

விண்மீன் அடியில் 

மெல்ல அசருகையில் 

கோபம் வெறுப்பை தாங்கிய போதும் 

மனம் மறுத்த சுவீகரிப்போ - நிராகரிப்பு! 


கடந்து போன போதிலும் 

காலம் காயமாற்ற தவறுகையில் 

எனக்குள் நான் கண்ட உண்மை...


எந்தவொரு நிராகரிப்பும் 

ஏதோவொன்றை புதுப்பிக்கின்றது

இரவு கொன்று காலை கதிரவன் 

காண்கையில் புரிந்து கொண்டேன்... 

  

வலி தந்த நிராகரிப்பும் 

ஒரு நிகரில்லா சுதந்திரமே! 







Comments

Popular posts from this blog

அவன் அருகே...

எப்போது?

வீரம் விளையாதோ!