அவன் அருகே...
கண்ணாடி என் முகம் காட்டும் வேளையிலும் - மனக்கண்ணாடி காட்டும் உன் முகம் கண்டு நெகிழ்கின்றேன் - மூழ்கின்றேன் என் மனக்கடலில் நீ குதித்தவுடன். உலகம் மறந்து உன்னுள் உறைய தவிக்கின்றேன் - ஊஞ்சலாடுகின்றேன் உன் நினைவென்னும் தென்றலில். புயலென உன் பார்வை என்னை தாக்கவே உன் விழி காண - வழி தேடுகின்றேன். மரணம் காட்டிலும் கொடிய உன் கோபம் தரும் வழியில் துடிக்கின்றேன். சில தருணங்களில் இளகாத உன் மனத்தால் மெழுகாய் உருகிப்போகின்றேன் ஆனாலும் அந்த இருளும் அவன் அருகே பௌர்ணமியே...