அவன் அருகே...

கண்ணாடி என் முகம் காட்டும் 

வேளையிலும் - மனக்கண்ணாடி 

காட்டும் உன் முகம் 

கண்டு நெகிழ்கின்றேன் - மூழ்கின்றேன் 

என் மனக்கடலில் 

நீ குதித்தவுடன். 


உலகம் மறந்து உன்னுள் 

உறைய தவிக்கின்றேன் - ஊஞ்சலாடுகின்றேன்

உன் நினைவென்னும் 

தென்றலில். 


புயலென உன் பார்வை 

என்னை தாக்கவே 

உன் விழி காண - வழி 

தேடுகின்றேன். 


மரணம் காட்டிலும் 

கொடிய உன் கோபம் 

தரும் வழியில் 

துடிக்கின்றேன். 


சில தருணங்களில் இளகாத 

உன் மனத்தால் மெழுகாய் 

உருகிப்போகின்றேன் 

ஆனாலும் அந்த இருளும்

அவன் அருகே பௌர்ணமியே...






Comments

Post a Comment

Popular posts from this blog

எப்போது?

வீரம் விளையாதோ!