எப்போது?
தொலைதூரம் இன்றி துயர் தருவதே உன் மௌனம் உன்னால் தவிர்க்கப்பட்டு மனம் பதைத்து உயிர் தவிக்கிறது பேச்சொலி கேட்கவே மனம் அடம்பிடிக்க காலத்தின் கோலமிது ஒருநாள் கைகூடுமென வலி சுமக்கிறேன் கனவில்லா இரவுகளும் உண்டு - உன் நினைவில்லா நொடியும் உண்டோ??? - வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை இருப்பினும் வேண்டாமல் போனதேனோ??? விரல் தொடுகையில் நாணம் நடுநிலை காண கை கோர்த்து இதழ் அணைத்து கதை பேச காத்திருக்கையில் காதலும் பெருகுதே!