எப்போது?

தொலைதூரம் இன்றி 
துயர் தருவதே உன் மௌனம்
உன்னால் தவிர்க்கப்பட்டு 
மனம் பதைத்து 
உயிர் தவிக்கிறது 

பேச்சொலி கேட்கவே  
மனம் அடம்பிடிக்க 
காலத்தின் கோலமிது 
ஒருநாள் கைகூடுமென 
வலி சுமக்கிறேன் 

கனவில்லா இரவுகளும் 
உண்டு - உன் நினைவில்லா 
நொடியும் உண்டோ??? - வேண்டும்
என்று வேண்டாத தெய்வமில்லை
இருப்பினும் வேண்டாமல் போனதேனோ??? 

விரல் தொடுகையில் 
நாணம் நடுநிலை காண 
கை கோர்த்து 
இதழ் அணைத்து
கதை பேச காத்திருக்கையில்
காதலும் பெருகுதே!

 

Comments

Popular posts from this blog

Beyond Fancy Desire: the dance of sacred souls

மீண்டும் தொலைவேனா?!