Posts

Showing posts from April, 2025

மீண்டும் தொலைவேனா?!

Image
எனை தேடும் பணி தொடங்கவே  உனை அடைந்தது என் கண்கள்  ஒளியிழந்த இரவுகளின் கனவானாய்  விடியல் காண விட்டுப்போனால்  தொலைந்து போவேனோ மீண்டும்? எண்ணங்களுக்கு தடைபோட்டாலும்  கண்களுக்கு தாழ் போடமுடியுமா? மூச்சுமுட்டும் நெருக்கம் சொப்பனம்  ஆயினும் - பார்வைபடும் தூரம்  இங்கு சொர்க்கம் காட்டிலும் புனிதமே! மனதை கொள்ளை கொண்ட அந்த  மௌனம் - அதை கலைத்து அன்பு ராகம் பாட பேராசை கொண்டாலும்  வார்த்தைகள் வற்றிப்போக - இந்த  ஊமை உன்வசமானதேனோ?    உன்னில் நானும் - என்னில்  நீயும் தொலைந்துவிட   மெல்ல மெல்ல மனமும்  ஏங்குதே உன் சிறு பார்வைக்கு!