மீண்டும் தொலைவேனா?!



எனை தேடும் பணி தொடங்கவே 

உனை அடைந்தது என் கண்கள் 

ஒளியிழந்த இரவுகளின் கனவானாய் 

விடியல் காண விட்டுப்போனால் 

தொலைந்து போவேனோ மீண்டும்?


எண்ணங்களுக்கு தடைபோட்டாலும் 

கண்களுக்கு தாழ் போடமுடியுமா?

மூச்சுமுட்டும் நெருக்கம் சொப்பனம் 

ஆயினும் - பார்வைபடும் தூரம் 

இங்கு சொர்க்கம் காட்டிலும் புனிதமே!



மனதை கொள்ளை கொண்ட அந்த 

மௌனம் - அதை கலைத்து அன்பு ராகம்

பாட பேராசை கொண்டாலும் 

வார்த்தைகள் வற்றிப்போக - இந்த 

ஊமை உன்வசமானதேனோ? 

 

உன்னில் நானும் - என்னில் 

நீயும் தொலைந்துவிட  

மெல்ல மெல்ல மனமும் 

ஏங்குதே உன் சிறு பார்வைக்கு! 


Comments

Popular posts from this blog

அவன் அருகே...

எப்போது?

வீரம் விளையாதோ!