ஏறு நடையான்!
தனக்கு இஷ்ட நேரமதில் கவி பொழியும் காளமேகமவன்,
கிடையாது, அவன் அகராதிதனில் 'முடியாது'
கங்கை கரைதனில் அவன்,
கைகளில் புரண்டோடும் ஷெல்லியின் கவி
சொல் ஒன்று செயல் ஒன்று அல்லவே,
தீண்டாமையை தீக்கிரை ஆக்கியவன்,
'புல்லிதழ்கள்' ரசிகன் அவன்,
ரவிவர்மா தீட்டிய பரமசிவனுமாவான்.
நேரமாவது காலமாவது
பசித்த போது புசித்து,
நினைத்த போதே நீராட்டம்.
கடுக்காய் மசியில் அழகெழுத்து.
பார்த்தவுடன் கவரும் கனல்விழிகள்.
தளரா தடுமாற நடை.
உறுதி கொண்ட உள்ளமாயிற்றே, அதனால்
நினைத்தவுடன் செய்து விடும் பழக்கம்.
பகைவனிடத்தில் அன்பு செய்தான்,
தன் பாட்டு வழியமைதந்ததே வாழ்வு,
பட்டகாலிலே பட்ட போதிலும் எதுவும் மங்கவில்லை,
தமிழன்னை தவம் கிடந்து ஈன்றாளோ உனை?
வேண்டிய நூறாண்டு கடந்தும் ஜீவிக்கும்
சுதேசமித்திரனே...
இவனே மானுடம் பாட வந்த மகாகவி!
Comments
Post a Comment