விடியலை நோக்கி!

நேற்று போல் இன்றில்லை என்பதால்

இன்று போல் நாளை இருக்காது

மாற்றமே ஆதாரமாகி போனது

காலமே காயமாற்றி போகிறாயா?

காணாத காட்சிகளும்

கல்லாத நெறிகளும்

கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளும்

பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது

நினைவுகள் அலைமோத

மஞ்சத்தின் மடியில் முகம் புதைத்து 

விழிநீர் வழித்தேன்

கடந்து வந்தேன் என்று கொண்டாடவா?

இல்லை, வருவதை எண்ணி தவிக்கவா?

பசுமரத்தாணி போல் பதிந்தவையும் உண்டு

சூரிய ஒளி கண்ட பனி போலும் சில உண்டு

ஆயிரம் பிறை காணும் ஆசையில்லை

அஸ்தமனம் காணுவதே போதும் என்றாயிற்று

உள்ளொளி கூறும் உண்மை

அதுவே சத்தியம்

மாற்றம் உலகம் கண்ட மாறா நியதி

அது கண்டு மனம் விட்டு போகாதோ?

அமைதிகொள் மனமே

சற்றுநேரத்தில் புறப்படுவோம்

ஒரு விடியலை நோக்கி...


Comments

Popular posts from this blog

அவன் அருகே...

எப்போது?

வீரம் விளையாதோ!