விதை விருட்ச்சமாவது விந்தையல்லவே!
நதியின்
நெளிவு சுளிவிலும்
நயம்படா புயலின் வேகம்
போதவில்லையாம்
வெறுமையின் சலிப்பும்
வெறுப்பு கொண்ட அருவருப்பும்
வாழ விடாத வன்மமும்
விடாது துரத்த
மீளா துயர் தந்த தனிமையில்
கடிகார முள் மீதான
என் கருணையற்ற பார்வை
தோற்ற இரவுகள் என
புதையுண்டு போனேனே
இருப்பினும்
பூமி பிளந்து
கிளை துளிர்த்து சாதிப்பேன்
அதுவே புரட்சி!
வீழ்வதே எழுச்சிக்காகவே...
வீழாமல் எழுவது சாத்தியமா?
அனுதினம் உதிக்கும்
ஆதவன்
கூறும் வாசகமும் அதுவே..!
Comments
Post a Comment