வீரம் விளையாதோ!
கடுஞ்சொல் கேட்டு
தலை
தாழ்த்தாமல் நிமிராயோ!
முடியா தருணமதில்
ஓட்டம்
தவறில்லை - துரத்துவது
நீயானால்.
அடங்க போவது இல்லை
- காரணம்
அடங்கி போனதே இல்லை
அன்பு கொண்டு அகிலம்
அணைத்தது
போதும் என்று தவிக்கையில்
கட்டிப்போட்ட கரங்களோ
தன்
கட்டவிழ்த்தெறிகையில்
கத்தியை அணைக்கும்.
ஆர்ப்பரிக்கும் ஆழ்
கடல் நான்
என்னுள் கலந்திட வரும்
ஆற்றுநீர் நீயென
எண்ணி - நிகரிலான்
உனை
புன்னகை கொண்டு அனுமதிப்பேன்.
நீ விதைத்ததே உன்
நிலத்தில்
விளையும் - ஆனால்
நெல் விளையும்
என் மண்ணில் சேர்ந்தே
விளைந்ததாம் வீரம்
- அது
கொண்டு உயருவோம் ஓரிரு படி!
kavithai super,keep going
ReplyDeletethank you ♥
Delete