கேளாய் பூங்குழலே

எந்தவொரு குறையுமின்றி அவனிடத்தில் 

கொட்டிக்கிடப்பற்றில் 

அவளுக்கு மிகவும் பிடித்தது - அந்த கோபம்

சில தருணமதில் 

அவனுள் கொந்தளிக்கும் தீக்கு 

இரை அவளோ என்ற உணர்வு இருந்தாலும் 

இரையாவதில் அவளுக்கு ஒரு இன்பம்.


முறைக்கும் அவன் விழிகள் 

திசையெங்கும் அதிரும் கம்பீர குரல் 

இவை கண்டு பயந்தாலும் 

அகம் நிறைந்த அன்போடு 

அவன் சினங்கொண்ட பொழுதெல்லாம் 

அவன் அறியா வண்ணம் ரசிப்பாள்.


சில நேரங்களில் அவனுள் எழும்

குழப்பங்கள் அவளை காயப்படுத்தியதுண்டு

அவனது எண்ணக்கிறுக்கல்கள் 

அவளுக்கு என்றும் சுகமான கீறல்களே.


அவனின் அனைத்தையும் மதித்து 

பிடித்தும் போன அவளுக்கு கோபம் 

ஒரு குறையே இல்லை - எதிர்த்து 

பேசும் எண்ணம் அவளுக்கில்லை 

வாய்ப்பிருந்தும் அவனுக்கு 

அடங்கி போவதில் ஒரு பேரானந்தம்.


அவனுக்கும் தெரியும் 

இவள் தானே என்று - அதனாலோ 

என்னவோ அவன் விழிகள் 

கவி பொழியாது - வார்த்தையில் 

காதல் தவழாத இறுகிய முகம் 

அது மலர்கையில் கண் இமைக்கா 

காண்பது அவளுக்கு ஓர் வரம்.


இதழ் முத்தம் உறவொன்றை 

சீர்செய்யும் பாச மாயையில் 

அவள் காக்கும் மௌனம் 

இயல்பு நிலைக்கு ஒரு எளிய வழி 

சற்றும் சளைக்காத தளராத 

அன்பு அது பெயற்குறிக்க முடியாத 

பாசம் அது.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 

அவளுள் நில்லாமல் ஓடும் அவன் 

எண்ணங்கள் - அவள் காணப்போவது 

தான் என்ன? 


ஓய்வற்ற அவளின் மௌனம் 

பேசுகையில் அவன் ஒரு 

கணப்பொழுதும் 

மாற்று யோசனையுமின்றி 

அவள் காலடியில் தன் கோபத்தை 

விட்டு தவறை உணரும் பொழுதும் 

கூட அது ஒன்றுமில்லை என 

வாதிடும் அவள் பாசம்


அனல் பறக்கும் வார்த்தைகள் 

கொடுத்த வலியை தூரப்போட்டு 

அவள் காத்த மௌனத்திற்கு 

அவன் கொடுத்த சிறிய வார்த்தை 

அரவணைப்பே போதும் 

வேறு என்ன வேண்டும்?

கேளாய் பூங்குழலே...




Comments

Popular posts from this blog

அவன் அருகே...

Cricket Meri Jaan...