இடைவெளி
உன்விழி பார்க்கையிலே
என் இதயம் வழிமாறிப்போவதும்
என் சொல் கேட்க மறுப்பதும்
நான் விரும்பி ஏற்றுக்கொண்ட அவஸ்த்தை
சொல்லாத வார்த்தைகள்
நில்லாத ஆறு போல ஊற்றுவதும்
கட்டிக்கொண்டு நெஞ்சோடு
சாயும் போது வற்றிப்போகும் வார்த்தை
அல்லும் பகலும் வந்துபோக
எனக்கென ஒரு நிமிடம்
காட்டாத உந்தன் கடிகாரம்
காட்டியதே எனக்கென ஒரு இடம்
தாமரை இலை மேல் விழும்
நீர்த்துளி போல உன்னில் நான்
ஒட்டாமல் ஓடிவிடுவேனோ - இந்த
மனக்கிலி தருதே ஆறாவலி
உன் நினைவுகளின் மத்தியில் நான்
வரமா சாபமா என அறியமுன்பே
அதில் முழுவதுமாய் நனைந்தேன்
ஒதுங்கிவிட வழியிருந்தும்
மனம் மறுத்தது - முழுதும்
நனைந்தும் முக்காடு கொண்டு
நான் போகும் பயணம்
எதை நோக்கி?
நீ நான்
எனும் இந்த இடைவெளி
என்று தணிந்து ஆகுவோம்
நாம்..?!
Comments
Post a Comment