Posts

Showing posts from August, 2020

விதை விருட்ச்சமாவது விந்தையல்லவே!

Image
நதியின் நெளிவு சுளிவிலும் நயம்படா புயலின் வேகம் போதவில்லையாம் வெறுமையின் சலிப்பும் வெறுப்பு கொண்ட   அருவருப்பும் வாழ விடாத வன்மமும் விடாது துரத்த மீளா துயர் தந்த தனிமையில் கடிகார முள் மீதான என் கருணையற்ற பார்வை தோற்ற இரவுகள் என புதையுண்டு போனேனே இருப்பினும் பூமி பிளந்து கிளை துளிர்த்து சாதிப்பேன் அதுவே புரட்சி! வீழ்வதே எழுச்சிக்காகவே... வீழாமல் எழுவது சாத்தியமா ? அனுதினம் உதிக்கும் ஆதவன் கூறும் வாசகமும் அதுவே..!

Black Queen

Image
I got dressed and stared into the mirror watching my hair. My fingers ran through the roots, I felt soft and bit oily. A straight-haired woman wishes for curl. A woman who got curls dreamed for straight locks. And my one I have no idea about her, to which group does she belong, even. Sometimes she's all curled, sometimes looks so wavy but not a stick-straight one. Yeah! I know she’s a significant part of my body. I bought her ritually prepared herbal hair oils and fancy healthy shampoos to wash them off. She was happy; growing good and looked so classy. At some point, she started to refuse my gifts. She was dull, frizzy, dull, and getting her back to normal became a nightmare for me. I was embarrassed by her looking when compared with everyone else's. I brushed her. Bought some good hair ties. Some suggested me to cut off four inches of my hair. I didn't want to do it, so, I cut off one inch. That was the most courage I could muster. I have been admiring long hair. I wa...

விடியலை நோக்கி!

Image
நேற்று போல் இன்றில்லை என்பதால் இன்று போல் நாளை இருக்காது மாற்றமே ஆதாரமாகி போனது காலமே காயமாற்றி போகிறாயா ? காணாத காட்சிகளும் கல்லாத நெறிகளும் கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளும் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது நினைவுகள் அலைமோத மஞ்சத்தின் மடியில் முகம் புதைத்து   விழிநீர் வழித்தேன் கடந்து வந்தேன் என்று கொண்டாடவா ? இல்லை , வருவதை எண்ணி தவிக்கவா ? பசுமரத்தாணி போல் பதிந்தவையும் உண்டு சூரிய ஒளி கண்ட பனி போலும் சில உண்டு ஆயிரம் பிறை காணும் ஆசையில்லை அஸ்தமனம் காணுவதே போதும் என்றாயிற்று உள்ளொளி கூறும் உண்மை அதுவே சத்தியம் மாற்றம் உலகம் கண்ட மாறா நியதி அது கண்டு மனம் விட்டு போகாதோ ? அமைதிகொள் மனமே சற்றுநேரத்தில் புறப்படுவோம் ஒரு விடியலை நோக்கி...

The Alchemist: the entire universe conspires to help you ♥

Image
So, I thought of adding colors to my life and chose BOOKS! Not because of improving my vocabulary or general knowledge, but wisdom. Book provides the experience of someone or something and makes you able to gain the same by their wisdom, initial point that made me curious about reading. I start reading... I kept reading... and one day, I got to know about the book: "The Alchemist" by Paulo Coelho, one of the best pieces of his work. I like positive vibes, being surrounded by it and this book enlightened me by the rich of it, by the story of a young shepherd going out to explore the world in search of his treasure which he dreamt about, and finds out the treasure, right at his door. No way, I'm not going to tell you the whole or even a summary here. Read it by yourself, so, that you can be possessed by the experience as it happened to me. Shepherd boy taught me that no matter who you are? Where you are from? You can be whoever you want to be. Follow your heart to achieve y...

ஏறு நடையான்!

Image
தனக்கு இஷ்ட நேரமதில் கவி பொழியும் காளமேகமவன், கிடையாது, அவன் அகராதிதனில் 'முடியாது' கங்கை கரைதனில் அவன், கைகளில் புரண்டோடும் ஷெல்லியின் கவி சொல் ஒன்று செயல் ஒன்று அல்லவே, தீண்டாமையை தீக்கிரை ஆக்கியவன், 'புல்லிதழ்கள்' ரசிகன் அவன், ரவிவர்மா தீட்டிய பரமசிவனுமாவான். நேரமாவது காலமாவது பசித்த போது புசித்து, நினைத்த போதே நீராட்டம். கடுக்காய் மசியில் அழகெழுத்து. பார்த்தவுடன் கவரும் கனல்விழிகள். தளரா தடுமாற நடை. உறுதி கொண்ட உள்ளமாயிற்றே, அதனால்  நினைத்தவுடன் செய்து விடும் பழக்கம். பகைவனிடத்தில் அன்பு செய்தான், தன் பாட்டு வழியமைதந்ததே வாழ்வு, பட்டகாலிலே பட்ட போதிலும் எதுவும் மங்கவில்லை, தமிழன்னை தவம் கிடந்து ஈன்றாளோ உனை?  வேண்டிய நூறாண்டு கடந்தும் ஜீவிக்கும்  சுதேசமித்திரனே... இவனே மானுடம் பாட வந்த மகாகவி!